உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட எஸ்.பி-யாக இருப்பவர் சாரு நிகம். 2013-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தனது நேர்மையான மற்றும் அதிரடியான நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர். சமீபத்தில் ஒரு குற்றச் சம்பவம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் நின்றிருந்த ஒரு தரோகா (சப்-இன்ஸ்பெக்டர்) செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சாரு நிகம், “அட, நீயே வந்து பேசிக்கோயா!” என்று கடுமையாகச் சத்தமிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
सुल्तानपुर एसपी चारू निगम के गुस्से का मामला सामने आया है। सुल्तानपुर एसपी मीडिया से बात कर रही थीं। इसी दौरान वे दरोगा पर गुस्सा हो गईं। pic.twitter.com/0iy61lXcnZ
— NBT Hindi News (@NavbharatTimes) April 7, 2026
சாரு நிகம் ஏற்கனவே பல அதிரடிச் சம்பவங்களால் புகழ்பெற்றவர். 2023-ல் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களைக் கைது செய்து, இன்ஸ்பெக்டர் வீட்டிலிருந்தே 50 கிலோ வெள்ளியைப் பறிமுதல் செய்து அதிரடி காட்டினார். மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டு கோரக்பூரில் பணியாற்றியபோது, அப்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வையே எதிர்த்து நின்று மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றவர். தற்போது சுல்தான்பூரில் குற்றங்களைக் குறைக்க அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் உபி காவல்துறையில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
