உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில், சொந்த மகனின் கொடுமை தாங்க முடியாமல் தாய் மற்றும் தம்பி ஆகியோரே கூலிப்படை ஏவிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த துஷ்யந்த் சிங் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் தனது பெற்றோரை அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

மகனின் இந்த தொடர் சித்திரவதையால் விரக்தியின் விளிம்பிற்கே சென்ற தாய் மாயா தேவி மற்றும் தம்பி சன்கித் சிங் ஆகியோர், உள்ளூர் ரவுடி ஒருவனுக்கு 5 லட்சம் ரூபாய் பேசி ‘ஸ்கெட்ச்’ போட்டுள்ளனர்.

கூலிப்படைக்கு முன்பணம் கொடுப்பதற்காகத் தனது நகைகளையும் அடமானம் வைத்த அந்தத் தாய், 55 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட துஷ்யந்தின் மரணம் குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

தற்போது தந்தை மற்றும் தம்பியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள தாய் மற்றும் கூலிப்படையினரை வலைவீசித் தேடி வருகின்றனர்.