இன்டர்நெட் உலகில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் கண்களையே பிதுங்க வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு பிரம்மாண்ட கட்டில்தான் (Charpai) இப்போதைய டாக் ஆஃப் தி டவுன். உலகிலேயே மிகப்பெரியது என்று சொல்லப்படும் இந்த கட்டிலின் நீளம் மற்றும் அகலத்தைப் பார்த்தால், இது படுக்கை மாதிரியே தெரியவில்லை, ஏதோ ஒரு மேடை போலவே காட்சியளிக்கிறது.
View this post on Instagram
ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தாராளமாக அமரக்கூடிய அளவுக்கு இடவசதி கொண்ட இந்த கட்டிலின் கால்கள், அப்படியே யானையின் கால்கள் போல அசாத்தியமான தடிமனோடு மிரட்டலாக செதுக்கப்பட்டுள்ளன.
சுமார் 70 முதல் 75 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிலை, அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு மல்யுத்த வீரர் தனது ஆசைக்காக பிரத்யேகமாகச் செய்ததாகக் கூறப்படுகிறது.
கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளதாகச் சொல்லப்படும் இந்த மெகா கட்டிலின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வருகிறது. “இது கட்டில் இல்லை, பஞ்சாபிகளின் கெத்து!” என நெட்டிசன்கள் இந்த வியக்கத்தக்க படைப்பை ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
