கடந்த சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைக்க மக்கள் கோரிக்கை வைப்பதாக அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் “தேவையான உணவகங்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு உணவகங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

நீங்கள் சொல்லும் கோரிக்கை தேவை என்றால் நிச்சயம் நல்லது என்று வரும்போது யாருடைய பெயர் யாருடைய திட்டம் என்பது முக்கியமல்ல மக்களின் பயன்பாடு தான் முக்கியம் என்பதற்கு ஏற்ப முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவை என்றால் பரிசீலிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.