சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், ஒரு தாய் தனது மகனிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறார். ஆனால் அது பிடிக்காமல், சிறுவன் அழுதபடி “ஒழுங்கா பேசுமா” என்று கூறுகிறான். அதற்கு தாய், “அழக்கூடாது” என ஆங்கிலத்தில் கூறியபடியே, “ஒழுங்கா என்றால் எப்படி?” என்று தமிழில் கேட்க, உடனே சிறுவன் “இப்படி, இப்படித்தான் பேசுவாங்க” என மழலையாகச் சொல்கிறான். திரும்பவும் தாய் ஆங்கிலத்தில் பேச முயன்றபோது, “தமிழ்ல பேசு” எனக் கோபத்துடன் கூறுகிறான்.
தாய், “பள்ளியில் ஆசிரியர் எப்படி பேசுவார்கள்? தமிழிலா அல்லது ஆங்கிலத்திலா?” எனக் கேட்டபோது, சிறுவன் யோசித்தபடி “ஆங்கிலத்தில்” எனச் சொல்ல, “அதனால்தான் நானும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறேன்” என தாய் பதிலளித்தார். இதற்கு சிறுவன் “நான் சொன்னத கேளு” என பாசமுடன் பதிலளித்து, பின்னரும் தாய் ஆங்கிலத்தில் தொடர, தலையில் அடித்து கொண்டு அழுகிறான்.
இவளுக English இம்சைக்கு அளவேயில்ல.
“ஒழுங்கா பேசுமா”,
“என்னம்மா பிரச்சனை உனக்கு”
எவ்ளோ மனசு கஷ்டம்ல கேக்குறான்.ஸ்கூல்லயும் pressure ,
வீட்டுலயும் pressure .
பாவம் பையன்🥺.அம்மாக்கும், teacher க்கும் different தெரியாத இவ எல்லாம்.. pic.twitter.com/ZP3CgyNjIK
— BINDU-ബിന്ദു. (@_BindhuR_) August 17, 2025
“>
தற்போது இந்த வீடியோவை 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதுடன், 800-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். “வீட்டிலும் ஆங்கிலம் பேசினால் பள்ளி மாதிரி நினைவுதான் வரும்”, “ஆங்கிலம் தெரியும் என காட்டிக்கொள்வதற்காகவே சிலர் இப்படி செய்கிறார்கள்” என்று பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
