சமூக வலைதளங்களில் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி மக்களை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துவது வழக்கம். அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோ இணையவாசிகளை நிலைகுலையச் செய்துள்ளது.
திறந்தவெளி காப்பகம் ஒன்றில், ஒரு சிறிய எருமைக் கன்றை சிங்கக் கூட்டம் சுற்றி வளைத்து வேட்டையாடும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. வேட்டையாடும் வேட்கையில் சிங்கங்கள் கன்றைத் தாக்கும்போது, சற்றுத் தொலைவில் ஒரு பெரிய எருமைக் கூட்டம் அந்த அகோரக் காட்சியை எவ்வித அசைவுமின்றி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
<a href=”http://
— Nature Chapter (@NatureChapter) January 8, 2026
“>
ஆனால், அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு எருமை மட்டும் அசாத்திய துணிச்சலுடன் சிங்கங்களை எதிர்த்துப் போராடி, தனது குட்டியைக் காப்பாற்ற முயற்சிக்கும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 16 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை, @NatureChapter என்ற பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், சிங்கங்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு அஞ்சாமல், அந்த எருமை அவற்றை முட்டித் தள்ளி பின்வாங்கச் செய்கிறது.
ஒரு கட்டத்தில் சிங்கங்கள் விலகிச் சென்றாலும், மீண்டும் அவை ஒருங்கிணைந்து அந்த இளம் கன்றைத் தாக்குவது போன்ற காட்சிகள் மிகவும் உருக்கமாக உள்ளன. இந்த வீடியோவை இதுவரை 36,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
“அந்தத் தாய் எருமை போராடியும் மற்ற எருமைகள் அதற்கு உதவ முன்வரவில்லை” என்றும், “ஆபத்துக் காலங்களில் காட்டில் நிலவும் ஒற்றுமையின்மையே இது போன்ற இழப்புகளுக்குக் காரணம்” என்றும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
