தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மெக்ஸிகோ என பல ஆசிய நாடுகளின் 2500 வகையான உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களும் தினமும் நான்கு நேரம் சாப்பாட்டுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. காலை உணவில் 75 வகையான உணவுகள் பரிமாறப்படும். மதிய உணவில் 225 வகை உணவும், இரவு 275 வகையான உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவு ஒரு சாப்பாடு கொடுக்கப்படும். நள்ளிரவு விருந்துக்கு 85 வகையான உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நள்ளிரவு விருந்து அதிகாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.