கிரீஸின் தெசலோனிகி நகரத்திலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கிப் புறப்பட்ட ரயான்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 என்ஜி விமானத்தில், நடுவானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
மேலும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், சுமார் 30,000 அடி உயரத்தில் வடக்கு மாசிடோனியா வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஜன்னல் ஒன்று திடீரென உடைந்து சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட பலத்த காற்றின் உறிஞ்சுதல் விசை காரணமாக, அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் ஜன்னல் வழியாகப் பாதி அளவு வெளிப்புறமாக இழுக்கப்பட்டார்.
A 61-year-old Ryanair passenger was nearly pulled from a Greece-to-Germany flight after debris from a damaged engine shattered a cabin window, leaving the passenger with friction burns. pic.twitter.com/ELPbb9SHm6
— Breaking911 (@Breaking911) July 10, 2026
“>
இந்த எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைத் தொடர்ந்து, விமானம் உடனடியாக அவசர அவசரமாகத் மீண்டும் தெசலோனிகி விமான நிலையத்திற்கே திருப்பப்பட்டு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக முனையத்திற்குத் திரும்பினர்.
இந்த விபத்துக்கான முக்கியக் காரணம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் ஒரு பகுதி உடைந்து சிதறி, பலத்த வேகத்தில் வந்து ஜன்னலைத் தாக்கியுள்ளது. இதனால் விமானத்தின் உட்புறக் காற்று அழுத்தம் திடீரெனக் குறைந்து இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன. இந்த போயிங் 737 என்ஜி விமானத்தின் என்ஜின் பாதுகாப்பு மற்றும் ஜன்னல் உடைந்தது குறித்து வடக்கு மாசிடோனியா நாட்டின் தலைமையில் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் போயிங் நிறுவனம் ஆகியவையும் இந்த விசாரணைக்குத் தேவையான முழு ஆதரவையும் உதவிகளையும் வழங்கி வருகின்றன.
