தமிழகத்தில் அடுத்தடுத்து வரவுள்ள இடைத்தேர்தல்கள் குறித்து நயினார் நாகேந்திரன் கடும் கண்டனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “ஆறு மாசத்துல இந்த இடைத்தேர்தல் வர என்ன அவசியம்? இப்பதானே மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாங்க, அதுக்குள்ள மக்களை ஏமாற்றும் மோசமான விளையாட்டை ஆரம்பிச்சுட்டாங்க” என்று சாடியுள்ளார். மக்கள் நலனைவிட எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, குதிரை பேரம் மூலம் இடைத்தேர்தலை திணிக்கும் அரசியல் தந்திரத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அம்பாசமுத்திரம், விராலிமலை என வரிசையாகத் திட்டமிடப்பட்டுள்ள இடைத்தேர்தல்கள் குறித்துப் பேசிய அவர், இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்பதை வலியுறுத்தியுள்ளார். “பத்திரிக்கை மற்றும் மீடியாக்களில் இந்த குதிரை பேரத்தை யாரும் ஏன் வெளிப்படையாகப் பேச மாட்டேங்கறீங்க? ஆறு மாசம் கூட இந்த ஆட்சிக்கு அவகாசம் கொடுக்க முடியாத அளவுக்கு மிக மோசமான சூழல் போயிட்டு இருக்கு” என்று தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
