மத்திய கிழக்கு ஆசியாவில் 38 நாட்களாக நீடித்த போர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த திடீர் போர் நிறுத்தத்தால் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராகப் பார்க்கப்பட்டாலும், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு தவறான ‘Draft’ செய்தி இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நள்ளிரவில் அவர் வெளியிட்ட பதிவில், “X குறித்த பாகிஸ்தான் பிரதமரின் செய்தி – வரைவு” (Draft message of PM of Pakistan) என்று குறிப்பிடப்பட்டிருந்தது, ஒரு நிமிடத்திற்குள் நீக்கப்பட்டாலும் அதற்குள் அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டது. ஒரு நாட்டின் பிரதமர் தனது சொந்தப் பதிவில் நாட்டின் பெயரைப் போட்டு ‘டிராஃப்ட்’ எனக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்பதால், இந்தச் செய்தி பாகிஸ்தானால் எழுதப்படவில்லை என்றும், அமெரிக்கா அல்லது மற்றொரு நாடு கொடுத்த ஸ்கிரிப்டை ஷெரீப் அப்படியே ‘Copy-Paste’ செய்துள்ளார் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மற்றொருபுறம், இந்த போர் நிறுத்தத்தின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதில் சர்வதேச ஊடகங்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. CNN போன்ற அமெரிக்க ஊடகங்கள் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தைப் பாராட்டி வரும் நிலையில், The New York Times மற்றும் AP செய்தி நிறுவனங்கள், இந்த அமைதி ஒப்பந்தத்திற்குப் பின்னால் சீனா இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
Diplomatic efforts for peaceful settlement of the ongoing war in the Middle East are progressing steadily, strongly and powerfully with the potential to lead to substantive results in near future. To allow diplomacy to run its course, I earnestly request President Trump to extend…
— Shehbaz Sharif (@CMShehbaz) April 7, 2026
“>
ஈரானை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க சீன அதிகாரிகள் திரைமறைவில் பெரும் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய அதே வேளையில், ஈரானை ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால், இந்த ஒட்டுமொத்த நாடகமும் சீனாவால் இயக்கப்படுகிறதா அல்லது அமெரிக்காவே ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து பாகிஸ்தான் மூலமாக வெளியிடச் செய்ததா என்ற கேள்வி இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
