மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வரவிருக்கும் பண்டிகைக் காலம் ஈரானில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் கொண்டு வர வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்த பிரதமர் மோடி, ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தியர்களின் பாதுகாப்புக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என ஈரான் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.