திமுக அமைச்சர் எவ. வேலுவுக்கு சொந்தமான சென்னை மற்றும் திருவண்ணாமலை குறித்த இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலை சோதனை தொடங்கிய நிலையில் 24 மணி நேரத்தை கடந்து சோதனை நீடித்து வருகின்றது.
ஏற்கனவே திமுக முன்னணியினர் வீடுகளில் ஐடி சோதனை நடந்த நிலையில் தற்போது தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருக்கும் எவ.வேலுவுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
