அமைச்சர் உதயநிதி பொறுப்பில் உள்ள சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு திறன் மேம்பாட்டு கழகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் துறை வசம் இருந்த திறன் மேம்பாட்டு கழகம் சிறப்பு திட்ட செயலாக்கத்  துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏவாக இருந்த உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.