திரிபுரா வருவாய் அமைச்சரும் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணியின் தலைவருமான நரேந்திர சந்திர தேவ வர்மா காலமானார். இவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் அகர்தலாவில் உள்ள கோவிந்த் வல்லப பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தேவ்வர்மா, ஒரு பழங்குடி தலைவர், IPFT ஐ நிறுவி வெற்றிகரமாக நடத்தினார். 2018ல் கூட்டணி ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.