இந்திய வாகன சந்தையில் 2022 -ஆம் ஆண்டு கார், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் என அனைத்து ரக வாகனங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தற்போது ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் வரும் 2023 ஆம் ஆண்டு ஏராளமான புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாக உள்ளது. அந்த ஸ்கூட்டர்களில் உள்ள முக்கியமான சில பிராண்டுகள் என்னென்ன என்பதை தற்போது இந்த பதிவில் காண்போம்.

பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: பெட்ரோல் ஸ்கூட்டர் தயாரிப்பில் தற்போது முன்னணியில் இருக்கும் சுசுகி, ஹீரோ, டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சுசுகி பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே தனது யூனிகான் ஸ்டைலால் இந்திய வாடிக்கையாளர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இதே மாடலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக தயாரிக்க சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தற்போது இருக்கும் பெட்ரோல் ஸ்கூட்டரை போலவே ஸ்டைல்  அண்டு லுக்கில் மாற்றம் இல்லாமல் உருவாகிறது. 4 kw திறன் கொண்ட என்ஜின் உடன் தயாராக இருக்கும் இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் தூரம் வரை சென்று வரலாம்.

டிவிஎஸ் கிரியோன்: டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே ஐ க்யூப் என்னும் பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கிரியோன் என பெயரிடப்பட்டுள்ள புதிய மாடல் அடுத்த ஆண்டின் இரண்டாவது பாதியில் வெளியாகலாம். ஸ்போர்ட்ஸ் மாடலில் உருவாகும் கிரியோன்  2018 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த வருடம் தான் சாலைகளில் வலம் வரப்போகிறது. இதன் ஒரு சார்ஜில் 80 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் கிரீம் 5.1 வினாடிகளில் பூஜ்ஜியம் கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 50 கிலோமீட்டர் வேகத்தை தொட்டுவிடும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது டிவிஎஸ் நிறுவனம்.

ஆக்டிவா எலக்ட்ரிக்: ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே பெட்ரோல் வேரியண்டில் சக்கை போடும் ஸ்கூட்டர். இந்த ஸ்கூட்டர் ஜப்பான் நிறுவனமான ஹோண்டா தயாரிப்பில் இந்திய ஸ்கூட்டர்களில் கெத்து காட்டி வருகிறது.  ஆக்டிவா எலக்ட்ரிக் வேரியண்டலிலும் கலக்க தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது இருக்கும் ஆக்டிவா 6g யின் மாடலை ஒத்திருக்கும் விதமாக எலக்ட்ரிக் ஆக்டிவா வடிவமைக்கப்பட்டது. ஒரு சார்ஜில் 95 கிலோ மீட்டர் செல்லும் திறன் கொண்ட பேட்டரியுடன் இந்த புதிய எலக்ட்ரிக் ஆக்டிவா வரவுள்ளது.

யமாஹா: யமஹா இருசக்கர வாகன உற்பத்தியில் முக்கிய நிறுவனமாகும். இதுவரை யமஹா நிறுவனம் தான் எலக்ட்ரிக் பக்கம் வரவில்லை. தற்போது 2023 ஆம் ஆண்டு அந்த குறையும் தீர்ந்து விடுகிறது. யமஹா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பில் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைகளில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ ஏஇ- 8: இந்த நிறுவனம் ஏற்கனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களை அறிமுகம் செய்து வெற்றிகரமாக விற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதன் அடுத்த மாடல் அடுத்த வருடம் அறிமுகமாக தயாராகியுள்ளது. முதல் முறை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களை குறி வைத்து ஹீரோ நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை வெளியிட இருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் ஒருமுறை சார்ஜ் செய்தால் என்பது கிலோமீட்டர் தூரம் செல்லும் விதமாக ஹீரோ ஏஇ- 8 வெளிவர இருக்கிறது. இதில் தற்போது முக்கிய அப்டேட் ஒன்று உள்ளது. அதாவது இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் எனும் பெருமையை பெற்ற பஜாஜ் ஸ்டேட்டஸ் வேரியண்டல் அடுத்த ஆண்டு வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவின் ஐகானிக் ஸ்கூட்டர் ஆன சேட்டக் வரவை தான் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.