உலக அளவில் வாட்ஸ் அப் பல கோடி யூஸர்களால் பயன்படுத்தபடும்  மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆப்ஸாக இருக்கிறது. மெட்டாவிற்கு சொந்தமான இந்த வாட்ஸ் அப் தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதற்கு போட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமெண்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது. இருப்பினும் உங்களது தனிப்பட்ட கான்டெக்ட் மட்டும் whatsapp குரூப்புகளில் ஷேர் செய்யப்படும் மீடியாக்கள் மற்றும் டேட்டாக்கள் உங்கள் டிவைஸ் இன் இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இறுதியில் அதனை மிகவும் ஸ்லோவாக செயல்பட காரணமாக விளங்குகிறது. இந்நிலையில் தற்போது இந்த சிக்கலை தவிப்பதற்கு டிவைஸிங் ஸ்டோரேஜை கிளியர் செய்ய பெரிய சைஸ் வீடியோக்கள் போட்டோக்கள் அல்லது பைல்களை அவ்வப்போது டெலிட் செய்ய வேண்டும்.

அதாவது உங்களது வாட்ஸ் அப் மீடியாவை நிர்வகிக்க மற்றும் நீங்கள் விரும்பாத பைல்களை டெலிட் செய்வதற்கான சில வழிமுறைகள் இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை எந்த டேட்டாவையும் டெலிட் செய்யும் முன் உங்கள் டிவைஸில் whatsapp எவ்வளவு ஸ்பேசை எடுத்துக் கொள்கிறது என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் உங்களது whatsapp settings- க்கு சென்று storage and data>manage storage சென்று பார்க்கவும். அங்கே உங்களது whatsapp மீடியா எவ்வளவு ஸ்பேசை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப் மீடியாவை ரிவ்யூ செய்து டெலிட் செய்வது எப்படி.?

  • whatsapp செட்டிங்சில் காணப்படும் storage and data -ற்கு சென்று manage storage -க்கு செல்ல வேண்டும்.
  •  Manage storage -ன் கீழ் larger than 5 MB option அல்லது கீழ்காணும் ஒரு குறிப்பிட்ட சேட்டை டேப் செய்ய வேண்டும். அது தவிர newest oldest largest போன்ற ஆப்ஷன்களை பயன்படுத்தி மீடியாவை வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.
  • அதன்பின் தனிப்பட்ட அல்லது மல்டிபிள் மீடியாவை செலக்ட் செய்து அவற்றை டெலிட் செய்து கொள்ளவும்.
  • வாட்ஸ் அப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட மீடியாவை நீக்கிய பின்பும் அவை உங்கள் மொபைல் ஸ்டோரேஜில் இருக்கலாம். அதனால் அவற்றை நிரந்தரமாக டெலிட் செய்ய போன் கேலரியில் இருந்தும் டெலிட் செய்ய வேண்டும்.
  • வாட்ஸ் அப் chats tab – ஐ ஓபன் செய்து அதன் பின் வலது மூலையில் இருக்கும் சர்ச் ஐகானை டேப் செய்யவும்.
  • நீங்கள் டெலிட் செய்ய விரும்பும் மீடியாவை சர்ச் செய்து தேர்வு செய்யவும்.
  • நீங்கள் நீக்க விரும்பும் item- ஐ டேப் மற்றும் ஓபன் செய்யவும்.
  • இப்போது more>delete என்பதை tab செய்யவும்.
  • whatsapp அப்லோடு குவாலிட்டி லிமிட் எவ்வாறு செட் செய்வது.?
  • WhatsApp settings -ஐ ஓபன் செய்து அங்கு காணப்படும் ஸ்டோரேஜ் அண்ட் டேட்டாவை டேப் செய்யவும்.
  • Media upload quality – யின் கீழே காணப்படும் ஆப்ஷன்களில் auto best quality அல்லது data server இவற்றில் உங்களுக்கு தேவையான ஒன்றை செட் செய்து கொள்ளவும்.
  • மொபைல் டேட்டா அல்லது வைஃபைல் தேவையற்ற மீடியா ஆட்டோ டவுன்லோட் ஆகாமல் இருக்க யூசர்கள் மீடியா ஆட்டோ டவுன்லோடிங் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம்.