தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியின மக்கள் நலத்துறை (சமூக நீதித்துறை) அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் அதிகாரப்பூர்வமாகக் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது அரசுப் பணியைத் தொடங்கினார்.
முன்னதாக, சென்னை கோட்டையில் உள்ள அமைச்சர் அலுவலகத்திற்குச் சென்ற வன்னியரசுவை, விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேரில் அழைத்துச் சென்று, அவரது அமைச்சர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தவெக தலைமையிலான கூட்டாட்சி அமைச்சரவையில் தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அதிகாரப் பகிர்வை ஒட்டுமொத்த விசிக தொண்டர்களும் கொண்டாடி வரும் வேளையில், கட்சியின் மூத்த நிர்வாகியான வன்னியரசுவை அவரே முன்னின்று இருக்கையில் அமர வைத்த நெகிழ்ச்சியான தருணம், தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் அரசியல் எழுச்சியின் முக்கிய மைல்கல்லாக உற்று நோக்கப்பட்டு வருகிறது.
விசிகவின் வன்னி அரசுவை அமைச்சர் நாற்காலியில் அமரவைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்#Thirumavalavan | #VCK | #VanniArasu | #MinisterVanniArasu pic.twitter.com/JYCTnwjKVL
— PttvOnlinenews (@PttvNewsX) May 22, 2026
“>
