அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தி மீதான தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தி, அந்த முக்கியமான கடல் வழிப்பாதையை எந்தவிதக் கட்டணமும் இன்றி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காகத் திறந்தே வைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானின் அணுஆயுதத் திட்டங்களைத் தடுப்பதிலும், அவர்கள் கைவசம் வைத்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை மீட்டு அழிப்பதிலும் அமெரிக்கா தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் வரி விதிக்கும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா சட்டவிரோதமானது என்று எச்சரித்துள்ளது. இப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பிராந்திய பதற்றத்தைத் தணிக்கவும் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து வலுவாக அமல்படுத்தி வருகிறது.
