சீனாவின் ஷாங்க்ஷி மாகாணத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 90 தொழிலாளர்கள் கொத்துக்கொத்தாகப் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது.
இந்த விபத்து நடந்த சமயத்தில் சுரங்கத்திற்குள் சுமார் 247 தொழிலாளர்கள் தங்களது அன்றாடப் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், எதிர்பாராத விதமாக அங்கு ஏற்பட்ட நச்சு வாயு கசிவுதான் (Toxic Gas Leak) இந்த விஸ்வரூப வெடிவிபத்திற்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து நடந்தவுடன் அலறியடித்துக் கொண்டு வெளியேறிய பல தொழிலாளர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், சுரங்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் காணாமல் போன மேலும் 9 தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் நள்ளிரவிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பூமிக்கு அடியில் நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் நச்சு வாயு கசிந்து 90 பேரின் உயிரைப் பறித்த இந்த கோர விபத்து சீனாவில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
