கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே உள்ள பெவர்லி கிரெஸ்ட் எனும் இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சொகுசு விடுதிக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இவர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டதில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து  மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். துப்பாக்கி சூட்டின் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.