கடந்த சில நாட்களாக பிரபல டெக் நிறுவங்களான கூகுள்,பேஸ்புக் போன்றவை நிதி நிலையினை காரணம் காட்டி, அதிலுள்ள பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. அதன்படி டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனம் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், லாபத்தை அதிகரிக்கும் நோக்கில்
இந்த முடிவினை எடுத்துள்ளது. மேலும் இது சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சியடைந்த சுவாச சாதனங்களை திரும்பப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து 6,000 பணிகளில் பாதி வேலைகள் இந்த ஆண்டு குறைக்கப்படும் எனவும் மற்ற பாதி வேலைகள் 2025- ஆம் ஆண்டிற்குள் குறைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த அக்டோபரில் அதன் பணியாளர்களை 5% அல்லது 4,000 வேலைகளைக் குறைப்பதற்காக புதிய மறுசீரமைப்பு என்ற திட்டம்  அறிவிக்கப்பட்டது.  அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வருவதாகவும் கூறப்படுகிறது.