ஜப்பானின் ரூபி ரோமன் எனும் திராட்சையின் விலை ரூ.8 லட்சமாகும். உலகின் அதிக விலை கொண்ட திராட்சை என்ற உலக சாதனை பட்டியலிலும் இந்த ரூபி ரோமன் இடம்பெற்றுள்ளது. இந்த திராட்சை சாதாரண திராட்சை பழத்தை விட 4 மடங்கு பெரியதாக இருக்கும். இவ்வகை திராட்சைகளின் அறுவடை ஜூலை மாதத்தில் முடிந்து ஜப்பானின் விடுமுறை காலத்தில் ஒச்சுகென் என்ற முறையை கடைப்பிடித்து அதனை பரிசாக கொடுப்பது வாடிக்கையான ஒன்று.

கடந்த 2020 ஆம் வருடம் ஒரு கொத்து ரூபி ரோமன் வகை திராட்சை பழங்கள் 12 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 9 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் ஆகும். அதேப்போல் ஒரே ஒரு ரூபி ரோமன் திராட்சை பழத்தின் விலை ரூ.30 ஆயிரத்துக்கு ஹியோகோ மாகாணத்தின் அமகாசாகியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.