விஞ்ஞானிகள் விண்வெளியில் ஒரு மர்மமான பொருளை கண்டுபிடித்து இருக்கின்றனர். இது சூரியனை காட்டிலும் பல மில்லியன் மடங்கு பிரகாசமாக காணப்படுகிறது. பூமியில் இருந்து சுமார் 380 மில்லியன் ஒளி வருடங்கள் தொலைவிலுள்ள, ஒருவகை சூப்பர் நோவாவின் பிரகாசம் சூரியனை விட 57 ஆயிரம் கோடி மடங்கு அதிகம் என தகவல் தெரிவிக்கிறது.

எனினும் அது வெகு இருப்பதால் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அதில் இருந்து வெளிவரும் ஆற்றல் மிகவும் வலிமையானது ஆகும். ஏராளமான விண்வெளி விஞ்ஞானிகள் இதனை ஒரு வகை சூப்பர்நோவா என கூறுகின்றனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் நோவாக்களில் இதுவே மிகத் தொலைவில் இருக்கிறது. இது மிகவும் சக்திவாய்ந்தது மற்றும் மிகமிக வேகமானது என சொல்லப்படுகிறது.