பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் நிதி மந்திரி இஷாக் தார் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அங்கு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூபாய் 35 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆயில் போன்றவற்றின் விலை தலா  ரூ.18 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.249 ஆகவும் டீசல் விலை ரூ.262.80 ஆகவும் மண்ணெண்ணெய் விலை ரூ.189.83 ஆகவும் டீசல் ஆயில் விலை லிட்டருக்கு ரூ.187 ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.