அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ‘எபிக் பியூரி’ (Epic Fury) என்ற ராணுவத் தாக்குதல் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலின் தீவிரத்தைக் கண்டு நிலைகுலைந்து போன ஈரான் தலைமை, மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்த வேண்டாம் என்றும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்காவிடம் கெஞ்சியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்தத் தாழ்மையான வேண்டுகோளைத் தொடர்ந்தே தற்காலிகமாகப் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவின் ராணுவ பலத்திற்கு முன்னால் ஈரான் பணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை இந்தச் சம்பவம் காட்டுவதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
