தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்த அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படம் மேஜர் முகுந்த்  வரதராஜனின் உண்மை கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படம் வெளியாகி 100 நாட்கள் நிறைவடைந்ததை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.

அதனுடன் இந்து ரெபேகா வர்க்கீஸுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவருடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், ஆளுமையின் மறு உருவம் இந்து ரெபேகா வர்க்கீஸ். நீங்கள் எடுத்த அனைத்து முடிவுகளுக்கும் நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை படமாக எடுக்க அனுமதித்ததற்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். மேலும் மேஜர் முகுந்தை நிலையாக கொண்டுள்ள இந்துவின் உலகம் தான் அமரன் என்று பதிவிட்டுள்ளார்.