லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த பென்னி ஜேம்ஸ் என்ற 31 வயது இளைஞர், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பெண்களுடன் உறவிலிருந்ததாகவும், தற்போது அந்தத் தவறுகளுக்காக வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பென்னி ஜேம்ஸ் கூறுகையில், “இப்போது அந்த வாழ்க்கை முறையால் நான் மிகுந்த தனிமையும் மன அழுத்தமும் அனுபவிக்கிறேன். இது உங்கள் வாழ்க்கையை அழிக்கிறது. எவரும் இந்தப் பாதையில் செல்லவே கூடாது” என எச்சரிக்கிறார். முதலில்அது மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை போலத் தோன்றினாலும், காலத்துடன் அது மன அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார். இவர் கன்டெண்ட் கிரியேட்டராக இருந்த காலத்தில், சமூக வலைதளங்களின் மூலம் ஏராளமான பெண்களுடன் தொடர்பு கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஒரே நாளில் 1000 ஆண்களுடன் நெருக்கமாக இருந்ததாக முன்பே செய்தியளித்த ஆபாசப் பட நடிகை போனி ப்ளூவை பற்றி பேசிய அவர், “போனி ப்ளூவைப் பார்த்தாலே நான் இளம் வயதில் இருந்ததைப் போல இருக்கிறார். அவர் இப்போதைய வாழ்க்கை முறையை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் வருங்காலத்தில் அவர் மன ரீதியாக சோர்ந்து போவார்” என அறிவுரை கூறியுள்ளார். தற்போது பென்னி ஜேம்ஸ் தனது வாழ்க்கை முறையை மாற்றி, புதிய பார்ட்னருடன் அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்றும், மது மற்றும் போதைப்பொருட்களையும் விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற வாழ்க்கை பாணி, ஆரம்பத்தில் புகழும், மகிழ்ச்சியும் தரும் போல் தோன்றினாலும், நீண்டகாலத்தில் வெறுமை மற்றும் மன அழுத்தம் மட்டுமே அளிக்கும் என்பதை தனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் பென்னி ஜேம்ஸ் உணர்த்துகிறார். அவரது இந்த வெளிப்பாடுகள், இளைஞர்களிடையே சிந்திக்க வைக்கும் ஒரு விழிப்புணர்வு செய்தியாக பரவி வருகிறது.
