தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் பாலமுருகன் என்னும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசான நிலையில் படத்தின் முதல் நாள்  வாத்தி திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 8 கோடி வசூலித்துள்ள நிலையில், கர்நாடகாவில் 1.5 கோடியும், வெளிநாட்டில் 1.5 கோடியும் வசூலித்துள்ளது. அதன்படி மொத்தமாக 14 கோடி ரூபாய் முதல் நாளில் வாத்தி படம் வசூலித்திருந்தது. இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி இரண்டாவது நாளில் 18 கோடி ரூபாய் வரை வாத்தி திரைப்படம் வசூலித்துள்ளது. மேலும் இதன் காரணமாக இரண்டு நாளில் வாத்தி திரைப்படம் மொத்தமாக 28 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது.