
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் மே 7ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக மே 24ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் கோவில் திருவிழாவுக்காக மே 15ஆம் தேதி அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்காக மே 22ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.