உலகப்புகழ் பெற்ற கொலம்பியா நாட்டுப் பாடகி ஷகிரா, தனது இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் மாதம் இந்தியா வரவுள்ளார். இதையொட்டி மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக இவர் பாடிய ‘Waka Waka’ பாடல், சர்வதேச அளவில் இவரைப் பெரும் புகழுக்கு உள்ளாக்கியது. கால்பந்து ரசிகர்களின் தாரக மந்திரமாக மாறிய அந்தப் பாடல், தற்போது வரை யூடியூப் (YouTube) தளத்தில் 445 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுப் புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஷகிரா இந்தியா வருவதால், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சிகளுக்கான தேதிகள் மற்றும் டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.