திருமண விழாக்களில் நண்பர்களின் வருகையும் அவர்கள் செய்யும் சுவாரசியமான குறும்புத்தனங்களும் அவ்விழாவை மேலும் வண்ணமயமாக்குவது வழக்கம். அந்த வகையில், திருமண மேடையில் மணமகன் ஒருவருக்கு அவரது நண்பர்கள் கொடுத்த விசித்திரமான விநோதப் பரிசு மற்றும் அதற்கு மணமக்கள் காட்டிய எதிர்வினை தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பொதுவாக திருமணத்திற்கு வரும் உறவினர்களும் நண்பர்களும் வழங்கும் பரிசுகளை விழா முடிந்த பிறகே வீட்டிற்குச் சென்று மணமக்கள் பிரித்துப் பார்ப்பதே மரபாக இருந்து வருகிறது. ஆனால், இந்த வைரல் வீடியோவில் மணமகனின் நண்பர்கள் கொண்டு வந்த ஒரு விசித்திரமான பரிசை, மேடையிலேயே உடனடியாகப் பிரித்துப் பார்க்குமாறு மணமகனை வற்புறுத்தியுள்ளனர்.
View this post on Instagram
மணமகள் அருகில் அமர்ந்திருக்க, மிகுந்த ஆர்வத்துடன் அந்தப் பரிசுக் பெட்டியை மணமகன் பிரித்து உள்ளே பார்த்துள்ளார். ஆனால், உள்ளே இருந்த பொருளைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகப் பெட்டியை மூடி தனக்குப் பின்னால் மறைத்து வைத்தார். உள்ளே இருந்த பொருளைப் பார்த்து மணமகன் வெட்கத்தில் முகம் சிவக்க, அருகில் இருந்த மணமகளும் வெட்கத்தால் தலை குனிந்து சிரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. ‘kichus_abi’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்தப் பெட்டிக்குள் என்ன இருந்தது என்பதை மணமகன் வெளிப்படையாகக் காட்டவில்லை என்றாலும், அது முதலிரவுக்கான விழிப்புணர்வு அல்லது பாதுகாப்புத் தொடர்பான பொருளாகத்தான் இருக்கும் என இணையவாசிகள் கமெண்ட் செக்ஷனில் நகைச்சுவையாக யூகித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
