
கேரளாவில் தி கோட் படத்தின் சிறப்பு காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பு காட்சி இன்று காலை 9 மணிக்கு தான் வெளியாக இருக்கிறது. ஆனால் கேரளா, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் வெளியானது. இந்நிலையில் கேரளாவில் தி கோட் படத்தை பார்த்த ரசிகர்களிடம் தொலைக்காட்சிகள் பேட்டி எடுத்தது. அந்த பேட்டியில் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறார்கள்.
அதாவது இது படமே கிடையாது. ஒவ்வொரு சீனும் வேற லெவலில் இருக்கிறது. சண்டை காட்சிகள் அற்புதமாக இருக்கிறது. எந்த படத்தில் இல்லாத வெரைட்டி ட்ரீட் இந்த படத்தில் இருக்கிறது என்று கூறினார்கள். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் பெரும் எதிர்பார்த்துக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது என்று குறிப்பிடத்தக்கதாகும்.