தமிழ் திரையுலகின் ஜாம்பவான் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜய்க்கு ‘பூவே உனக்காக’ மூலம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தவர் சௌத்ரி. இன்று விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏற உள்ள தருணத்தில், அவரைப் பற்றி சௌத்ரி ஒரு வருடத்திற்கு முன்பு சொன்ன தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்தப் பேட்டியில், “சினிமாவில் ராஜாவாக இருக்கும் விஜய், மக்களை நேசிப்பதால்தான் அரசியலுக்கு வருகிறார். சேவை செய்வதே அவரது நோக்கம் என்பதால், சினிமாவைப் போலவே அரசியலிலும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்” என்று மனதார வாழ்த்தியிருந்தார்.
அவர் கணித்தபடியே இன்று விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். ஆனால், அந்த வெற்றியைக் காண அவர் உயிருடன் இல்லை என்பதுதான் பெரும் சோகம்.
தனது தந்தையை இழந்து கதறி அழும் நடிகர் ஜீவாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையுலகிற்கு 98 படங்களை வழங்கிய ஒரு மாபெரும் கலைச் சிற்பியின் மறைவு, தமிழக அரசியலிலும் சினிமாவிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
