தளபதி விஜயதிலகனின் அரசியல் வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்கள், அவரது ‘தி கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியைச் சுட்டிக்காட்டி அது தற்செயலான நிகழ்வா அல்லது இயற்கையின் சமிக்ஞையா என்று வியந்து வருகின்றனர். அந்தத் திரைப்படத்தில் விஜய் பயன்படுத்தும் காரின் எண் ‘TN07 CM 2026’ என்று இருப்பதை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் 2026-ல் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என்பதை இது முன்கூட்டியே கணித்திருப்பதாகக் கூறும் ரசிகர்கள், விஜயை ஒரு ‘டைம் டிராவலர்’ என்றும் அவரது லட்சியம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
View this post on Instagram
“>
இந்த வைரல் வீடியோவைத் தொடர்ந்து, நடிகை பூஜா ஹெக்டேவும் ஒரு சுவாரசியமான வீடியோவை பகிர்ந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தேர்தலைப் பற்றி பேசும் ஒரு சூழலில் அவர் விஜயை நோக்கி சைகை காட்டுவது போன்ற பழைய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், விஜயுடன் இணைத்துப் பேசப்படும் நடிகை திரிஷாவின் பழைய பேட்டி ஒன்றும் இணையத்தில் உலா வருகிறது.
இந்நிலையில் அதில் அவர் எதிர்காலத்தில் முதல்வர் ஆவேன் என்று கூறியிருந்தது தற்போதைய சூழலோடு பொருந்திப்போவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த விசித்திரமான ஒற்றுமைகள் அனைத்தும் விஜய்யின் அரசியல் வெற்றி ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் தொடக்கம் என்பதை உறுதிப்படுத்துவதாகத் தமிழக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
