2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து வடிவேலு பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனைப் போலவே இந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய போவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் வடிவேலு பிரசாரத்தால் திமுகவுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் இப்போது நடப்பது மக்களவைத் தேர்தல் என்பதால் கமல் பிரசாரம் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.