தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்தது. புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். அவர் பேட்டியில் கூறியதாவது, இன்னும் மழை நிற்கவில்லை. மழை நின்றதும் தண்ணீர் வடிந்து விடும்.

நிவாரண பணிகளை துரிதப்படுத்த மின்துறை அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சரை அனுப்பி இருக்கிறேன். துணை முதல்வரும் செல்கிறார். எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதே இல்லை. கவலைப்படுவதும் இல்லை. அனைவருக்கும் ஓட்டு போட்டவர்களுக்கும் ஓட்டு போடாதவர்களுக்கும் பணி செய்து கொண்டிருக்கிறோம். அதுதான் நீங்கள் நோக்கம். எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.