தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் வாகனப் பிரச்சாரம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுங்கச்சாவடி அருகேயுள்ள சரளைப் பகுதியில் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள் இதற்கான முழு ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

அண்மையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகியவர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், இந்தப் பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் விஜய்யின் முதல் வாகனப் பிரச்சாரம் இது என்பதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போது வரை, காவல்துறையிடம் இருந்து வாகனப் பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்கள் ஏற்பாட்டுப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். கே.ஏ. செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள் பிரச்சாரம் நடைபெறும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகின்றனர்.