தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவர் தற்போது அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ். அம்பேத்குமார் தயாரித்து உள்ள நிலையில் கடந்த 10-ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அபர்ணாதாஸ் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

டாடா  படத்தை பார்த்துவிட்டு பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் தற்போது படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி டாடா திரைப்படம் 12 கோடி வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் டாடா படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் இனி வரும் காலத்தில் இன்னும் பல கோடிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.