காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமானார். தற்போதைய நிலையில் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆக மாறிவிட்டார். இவர் பல போராட்டங்களுக்குப் மத்தியில் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூரி தன்னுடைய ரசிகரின் தாயாருக்கு உடல் நலம் சரியில்லாததால் ஆட்டோவில் சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

சூரி ஆட்டோவில் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னுடைய பெயரில் தன் ரசிகர்கள் ஏராளமான உதவிகள் செய்து வரும் நிலையில், தன் ரசிகரின் அம்மாவை தன்னுடைய அம்மாவாக நினைத்து பார்க்க வந்துள்ளேன் என சூரி அவர்களிடம் கூறியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.