சமூக ஊடகங்களில் தினமும் வியப்பூட்டும் வீடியோக்கள் வைரலாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், தற்போது ஒரு பூனை பாதையை கடந்ததால் ஏற்பட்ட பயங்கர விபத்துக்கான வீடியோ வைரலாகியுள்ளது. இது பார்ப்பவர்களை  மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக “பூனை பாதையைக் கடக்குது அபசகுனம்” என்ற பழமொழி மீண்டும் சுட்டிக் காட்டப்படுகிறது.

இந்த வீடியோவில், ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்மணி ஒருவரின் பாதையில், திடீரென ஒரு பூனை வழியை கடக்கிறது. உடனே அதைக் கவனித்த அந்த பெண், தன்னுடைய ஸ்கூட்டியை நிறுத்துகிறார். இதனால், பின்னால் வந்த மற்ற ஸ்கூட்டிகள் திடீரென பிரேக் அடிக்க முடியாமல் நேரில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இது, அங்கு இருந்த அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. “பூனை பாதையைக் கடக்குது” என்பதற்காக ஸ்கூட்டியை நிறுத்திய அந்த பெண்ணின் செயல், ஒருவருக்கோ இருவருக்கோ ஏற்பட்ட அபாயத்தை தடுப்பதற்குப் பதிலாக விபத்துக்கே காரணமாகி இருக்கிறது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @rajgarh_mamta1 என்ற கணக்கு பகிர்ந்துள்ளது. இதனை ஆயிரக்கணக்கானோர் பார்த்து லைக் செய்ததுடன், பலரும் கருத்து பகிர்ந்துள்ளனர். ஒருவர் “பூனை எந்த தவறும் செய்யவில்லை” என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் “இப்படி ஒரு விபத்துக்குப் பின்னணியில் ஒரு பழமொழி இருக்கின்றது என்பதே நம்ப முடியவில்லை. இப்போது தான் நிஜமாகப் புரிகிறது” என குறிப்பிடுகிறார்.

இதேவேளை, சிலர் இந்த விபத்து வீடியோவுக்கும் பழமொழிக்கும் தொடர்பு இல்லை என்றும், இது வெறும் சீரற்ற சூழ்நிலையால் நிகழ்ந்ததல்லாமல் மனித தவறுக்கே காரணம் என்றும் வாதிடுகின்றனர். இருப்பினும், “பூனை பாதையைக் கடக்குது” என்பதன் மீது சமூகத்தில் உள்ள நம்பிக்கையை இந்த வீடியோ மேலும் வலுப்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் உறுதி. மேலும் தற்போது இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் பரவி, சிந்தனையையும் விவாதத்தையும் தூண்டும் வகையில் பேசப்படும் விசயமாகியுள்ளது.