கர்நாடக மாநிலம் காவேரி மாவட்டத்தில் பீபிஜா ஜாண்டி(18) என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அறிந்த பெற்றோர் பீபிஜாவை கண்டித்தனர். ஆனாலும் பீபிஜா புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து புகைப்பிடித்து வந்தார்.
ஒருநாள் கோபத்தில் பெற்றோர் பீபிஜாவை கடுமையாக திட்டினர். இதனால் மன உளைச்சலில் இருந்த பீபிஜா இரவு நேரம் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
