பிரதமர் நரேந்திர மோடி திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என பிரதமர் மோடி கேட்டுள்ளார். பாஜகவின் ஆட்சியை கலைத்த அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா என தற்போது நான் கேட்கிறேன்.

பிரதமர் மோடி கூட்டணி பற்றி பேசலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பிறகு இன்னும் ஆன்லைன் ரம்மியால் எத்தனை உயிர்கள் பறிபோகப் போகிறது. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தருவாரா என்று கேள்வி எழுப்பிய முதல்வர், ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் இருப்பது மர்மமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.