ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக தீவிர களப்பணி ஆட்சி வருகிறது. அந்த வகையில் திமுக கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி களத்தில் தீயாக இறங்கி வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட வெளியாகி இருந்தது. திமுக அமைச்சர்களில் பழனிவேல் தியாகராஜன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மட்டும் தான் ஈரோடு கிழக்குக்கு செல்லவில்லை.

மற்ற அமைச்சர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஒரு படி மேலே சென்று அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விதமான வியூகங்களை வகுத்துள்ளது எதிர்க்கட்சிகளுக்கு மிகுந்த சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுவிட்டால் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினின் குட் புக்கில் மேலும் ஒரு படி உயர்ந்து விடுவார் என்று கூறப்படுகிறது.