நாகை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தின் போது நடந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, நாகையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, பாங்கு  ஒலிக்கும் சத்தம் கேட்டது.

அதனை கவனிக்காமல், EPS ஸ்டேஜில் இருந்து தன் உரையைத் தொடர்ந்துகொண்டிருந்தார். பின்னர் தொண்டர்கள் கூறியதும், எடப்பாடி பழனிசாமி, தனது உரையை உடனே நிறுத்தி, அந்த நிகழ்வுக்கு வருந்தும் வகையில் மன்னிப்பு கேட்டார்.

“நான் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகே ஆலயத்தில் தொழுகை நடக்கிறது என்பதை எனக்குத் தெரியவில்லை. அதனால் இந்தப் பேச்சை இப்போது நிறுத்துகிறேன்… மன்னிக்கவும்,” என அவர் மெளனமாக சென்றார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. EPS-ன் இந்த மனப்பான்மை மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. நாகை மாவட்டம் முழுவதும் இந்த காட்சிகள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.