திருமணம் செய்வதாக கூறி ஒன்றாக குடும்பம் நடத்தி உறவு வைப்பது பாலியல் வன்கொடுமை ஆகாது என கொல்கத்தா ஹைகோர்ட் கூறியுள்ளது. பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார். அவருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த வாலிபருக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவை எதிர்த்து அந்த நபர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கொல்கத்தா ஹைகோர்ட் இரண்டு பேரும் சம்மதித்து உறவு வைத்து விட்டு பிறகு பாலியல் வன்கொடுமை புகார் தெரிவிப்பது ஏற்க முடியாது எனக்கூறி அந்த தண்டனையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.