சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் மாலை நேரத்தில் எப்போதும் பரபரப்போடு மக்களின் கூட்டம் காணப்படும். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த ரோட்டில் கார் ஒன்று தாறுமாறாக சென்றது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மேல் மோதி சென்றது. அதன்பின் சாலையின் வீதியில் நடந்து சென்றவர்களின் மீதும் மோதியது. இதனால் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் ஜாம்பஜார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வேகமாக சென்ற காரை சிறுது தூரம் துரத்திச் சென்று கார் ஓட்டியவரை மடக்கி பிடித்தனர். அதன்பின் கார் ஓட்டுனரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் கார் யாருடையது என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவருடைய நண்பனின் பெரியப்பா கார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
