தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராயது துர்கம் மை ஹோம் பூஜாவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராஜேஷ் பாபு தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் வாடகை தாய் மூலம் ராஜேஷ் பாபு குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தார். இதற்காக சந்தி என்ற இடைத்தரகர் மூலமாக ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் சிங் அஸ்விதா தம்பதியை சந்தித்தனர். செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொடுத்தால் 10 லட்ச ரூபாய் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி 4 வயது மகனுடன் சஞ்சய்சிங்கும், அஸ்விதாவும் ஹைதராபாத்துக்கு வந்தனர். அந்த குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருக்கும் ராஜேஷ் பாபு வீட்டில் அஸ்விதாவை தங்க வைத்தனர். அவரது கணவர் சஞ்சய் சிங்கை ஏழாவது மாடியில் இருக்கும் வீட்டில் தங்க வைத்துள்ளனர். செயற்கை முறையில் குழந்தை பெற தேவையான அனுமதிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக ராஜேஷ் பாபு அஸ்விதாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது அஸ்விதா செயற்கை முறையில் படைத்ததாக மட்டுமே குழந்தை பெற்றுக் கொடுப்பேன்.

உடலுறவு கொள்ள சம்மதிக்க மாட்டேன் என ராஜேஷ் பாபுவுடன் கூறியுள்ளார். மேலும் தனது கணவரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். ஒடிசாவுக்கு திரும்பி செல்லலாம் என அஸ்விதா கூறியுள்ளார். ஆனால் சஞ்சய் சிங் குழந்தை பெற்றுக் கொடுத்தால் பணக்கஷ்டங்கள் நீங்கும் என மனைவியை சமாதானம் செய்து வைத்தார். நாளுக்கு நாள் ராஜேஷ் பாபுவின் தொந்தரவு அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் கணவர் மற்றும் மகனுடன் ஒடிசாவுக்கு தம்பி சென்றுவிடலாம் என அஸ்விதா முடிவு எடுத்தார்.

ஒன்பதாவது மாடி பிளாட்டில் பல்கனியில் இருந்து சேலை கட்டிக்கொண்டு இரண்டு தலங்கள் கீழே சென்றால் ஏழாவது மாடியில் இருக்கும் சாய்வு தளம் வழியாக தன் கணவரின் பிளாட்டை அடையலாம் என திட்டமிட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் 9 மாடி பால்கனியிலிருந்து இரண்டு புடவைகள் மூலம் கீழே இறங்க முடிவு செய்தார். அப்போது கைநழுவி அஸ்விதா கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அஸ்விதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.