மும்பையில் ஒரு இளைஞர் டேட்டிங் ஆப் மூலம் பெரிய ஏமாற்றுக்கு ஆளானார். Aisle ஆப்பில் ஒரு பெண்ணுடன் பேசி, அன்று இரவு சந்திக்க முடிவு செய்தார். பெண் அருகில் உள்ள பாருக்கு அழைத்தாள். உள்ளே சென்றதும் சூழல் அந்யோன்யமாக இருந்தது – பெரிய அறை, இசை, ஆனால் மக்கள் குறைவாக இருந்துள்ளனர் இது அந்த நபருக்கு சந்தேகத்தை கொடுத்துள்ளது ஆனாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார். அங்கு சென்று அமர்ந்ததும் பெண் விலையுயர்ந்த ப்ளூ லேபிள் போன்ற பானங்களை தொடர்ந்து ஆர்டர் செய்துள்ளார்.

பில் வந்தபோது இளைஞருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது 24,000 ரூபாய், கூடுதல் 2,000 ரூபாய் சேவை கட்டணம். ஒவ்வொரு பானமும் 60 மிலி மட்டுமே என்றனர். இது பிரபல “பார் ஸ்கேம்” – பெண் மற்றும் பார் உரிமையாளர்கள் சேர்ந்து ஏமாற்றும் திட்டம். பயத்தில் 10,000 ரூபாய் கொடுத்து அந்த இளைஞர் தப்பியுள்ளார். பின்னர் தன் அனுபவத்தை ரெடிட்டில் “Got scammed through dating app” என்று பகிர அது வைரலாகியுள்ளது.

இளைஞரின் ரெடிட் பதிவுக்கு பலர் கருத்து தெரிவித்தனர். “இது மும்பை-தானேயில் பொதுவான பழைய ஸ்கேம்” என்றனர். ஒருவர் “எனக்கும் அதே பெண் மேட்ச் ஆனாள், சந்தேகித்து செல்லவில்லை” என்றார். ஒரு பெண் விரைவாக சந்திக்க அழுத்தம் கொடுப்பது, பார் இடத்தை தானே தேர்வு செய்வது, பானங்கள் ஆர்டர் செய்ய வற்புறுத்துவது போன்றவை மோசடிக்கான அறிகுறிகள். ஆன்லைன் டேட்டிங்கில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.