ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள சதர் மருத்துவமனை வளாகத்தில், 14 வயது சிறுமி ஒருவர் கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்திற்குப் பிறகு குழந்தை கழிவறையின் தட்டில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால், அந்த பச்சிளம் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது தாயும் சேயும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சிறுமி இத்தகைய இக்கட்டான நிலைக்கு எவ்வாறு ஆளானார் என்பது குறித்தும், அவருக்குப் பின்னால் ஏதேனும் குற்றச் செயல்கள் உள்ளனவா என்பது குறித்தும் போலீசார் அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.