உத்தரபிரதேசம் மாநிலம், சித்ரகூட் மாவட்டத்தில் விஜய் ரைஸ் – சப்னா(30) என்ற இரண்டு பேரும் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதர் முறையில்) 1 1/2 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். சப்னாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளது . சப்பினாவிற்கு ஏற்கெனவே திருமணம் ஆகி முதல் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.

முதல் கணவரிடம் ஏற்பட்ட பிரச்சனைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சப்னாவிற்கு. தற்போது லிவிங் டு கெதரில் வாழ்ந்து வரும் விஜய் உதவியதால் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி இரவு வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார் விஜய். அப்போது சப்னா சமைத்து வைத்திருந்த உணவு அவருக்கு பிடிக்கவில்லை என்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனக்கு பிடித்த  உணவை சமைத்துக் கொடுக்காததால் விஜய் சப்னாவை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் சப்னா சம்பவ இடத்திலே உயிர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் விஜயை கைது செய்தனர். பிடித்த  உணவை சமைத்துக் கொடுக்காத  பிரச்சனைக்காக பெண் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.